கள்வர்கள் நாட்டை விட்டு வெளியேற இடமளிக்கப்பட மாட்டாது
கள்வர்கள் நாட்டை விட்டு வெளியேற இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் யூ.டி.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர். இது தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.நாட்டை விட்டு வெளியேறிச் செல்லவோ அல்லது மறைந்து இருந்து வாழவோ இடமில்லை என பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பலர் இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் சென்று வருவதாக ஊடகங்களில் நாள் தோறும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








