வடக்கு முதலமைச்சர் ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை அலரிமாளிகையில் சந்திக்கவுள்ளார்.
காணிப் பிரச்சினைஇ மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த போதும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








