அத்தியாவசியப் பொருள்களின் விலையும் குறைகிறது
எதிர்வரும் ஆறு நாட்களில் அத்தியாவசியப் பொருள்கள் சிலவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மாலைத்தீவின் நிதி அமைச்சர் அப்துல் ஜஹாட்டுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். மேலும் 12 இலட்சத்து 25 ஆயிரம் பேர் வரையிலான ஊழியர்கள் சம்பள அதிகரிப்பிற்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர் அவர்களது சம்பளத்தை 5000 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.








