இராணுவத் தளபதி பதவியில் மாற்றம்
இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க கடமையாற்றி வருகின்றார்.எதிர்வரும் வாரமளவில் தயா ரட்நாயக்க இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓராண்டு கால சேவை நீடிப்பின் அடிப்படையில் தயா ரட்நாயக்க இராணுவத் தளபதியாக கடமையாற்றி வந்தார். எனினும் புதிய அரசாங்கம் தயா ரட்நாயக்கவின் சேவைக் காலத்தை மேலும் நீடிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவத் தளபதி வெற்றிடத்திற்கு சில சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.ரஷ்யாவிற்கான இலங்கை துணைத் தூதுவர் மேஜர் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா அல்லது மேஜர் ஜெனரல் ஜகத் ரமுகேபாதேக ஆகியோரின் பெயர்களும் இராணுவத் தளபதி பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ளன.








