Breaking News

இராணுவத்தின் உதவியுடன் முல்லையில் சிங்களவர் சட்டவிரோத மீன்பிடி

இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் தடை செய்­யப்­பட்ட கடற்றொழில் முறை­ மூலம் தென்­ப­குதி மீன­வர்கள் கடற்றொழில் செய்­வதால் வட­ப­குதி மீன­வர்களின் வாழ்­வா­தா­ரத்தை அழித்து வரு­கி­றார்கள் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்புப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் குற்றம் சாட்­டி­யுள்ளார். இதனை தடுப்­ப­தற்கு வட­மாகாண மீன்­பிடி அமைச்சர் மத்­திய அமைச்­ச­ருடன் பேச்­சுவார்த்­தையில் ஈடு­பட்டு தீர்­வ­ளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வட­ம­ராட்சி கிழக்குப் பகு­திக்கு விஜயம் மேற்­கொண்டு அப்­ப­குதி மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யமை தொடர்­பாக தெரி­விக்­கையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரி­விக்­கையில், வட­ப­குதி கடற்றொழி­லா­ளர்கள் தொடர்ந்தும் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை சந்­தித்த வண்ணம் உள்­ளார்கள். இந்­திய மீனவர் பிரச்­சினை ஒரு­புறம், தென் இலங்கை மீனவர் பிரச்­சினை என பல இடர்­களை சந்­தித்­து­வ­ரு­கி­றார்கள்.

குறிப்­பாக இலங்­கையில் தடை செய்­யப்­பட்­ட மீன்­படி முறை­களைப் பயன்படுத்தி தென்­னி­லங்கை மீன­வர்கள் இரா­ணு­வத்தினரின் பின்­பு­லத்துடன் தொழிலை செய்வதனால் மீன்­வளம் குன்றி வருகின்றது.

இத்­த­கைய பிரச்­சினை பாரிய தொன்­றாகும். குறிப்­பாக தடை செய்­யப்­பட்­ட தொழில் முறையை பயன்­ப­டுத்­து­வது ஏற்க முடி­யாத ஒன்­றாகும். இத்­த­கைய பிரச்­சி­னையை வட­மா­கா­ணத்­திற்குப் பொறுப்­பான மீன்­பிடி அமைச்சர் மத்­திய கடற்­றொழில் அமைச்­ச­ருடன் தொடர்பு கொண்டு பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட வேண்டும் தாமும் இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு மக்கள் இப்பகுதி வீதிகள் தொடர்பாகவும் போக்குவரத்து தொடர்பாகவும் தனது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.