உலகக்கிண்ண போட்டிகளிலிருந்து ஹபீஸ் விலகல்
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து சகலதுறை ஆட்டக்காரர் முகமது ஹபீஸ் விலகியுள்ளார்.
கடந்த வாரம் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்தார். காயம் குணமடைய 3 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி ஹபீஸீக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து உலகக்கிண்ண போட்டியில் இருந்து 34 வயதான முகமது ஹபீஸ் நேற்று விலகினார். அவர் உடனடியாக தாயகம் திரும்புகிறார். அவரது விலகல் பாகிஸ்தானுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக நசிர் ஜாம்ஷெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.