Breaking News

பொருத்தமான நேரத்தில் சிறிலங்காவுக்கு செல்வார் ஜோன் கெரி - ஜென் பசாகி

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பொருத்தமான நேரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகி தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் நேற்று முன்தினம் அமெரிக்க இராஜாங்கச் செயலரை ஜோன் கெரியைச் சந்தித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர்,“அமெரிக்க இராஜாங்கச் செயலரின் பயணத் திட்டம் தொடர்பான எந்த தகவலும் கைவசம் இல்லை.

இந்த அழைப்பை இராஜாங்கச்செயலர் நிச்சயமாக விரும்புவார் என்று தெரியும். எனவே, அவரது பயணத் திட்டம் குறித்து எதிர்பார்க்கிறோம்.
பொருத்தமான தருணத்தில், சிறிலங்காவுக்குப் பயணம் செய்வதை விரும்புவதாக அவர் தெரிவித்திருப்பார்” என்று குறிப்பிட்டார்.