Breaking News

வலி.வடக்கு மீள் குடியேற்றம்! நாளை முக்கிய சந்திப்பு

வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு நாளைய தினம் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இச் சந்திப்பு நாளை  காலை  வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

வலிகாமம் வடக்கில் ஆறாயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்காளின் காணிகளை இலங்கை இராணுவம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் நீண்ட காலமாக பிடித்து வைத்துள்ளது.மக்களுடைய இக் காணிகளில் இராணுவம் உல்லாச விடுதிகள்,விளையாட்டு மைதானங்கள்,திரையரங்குகள் போன்ற பல உல்லாச இடங்களை அமைத்து அங்கு இராணுவ குடியிருப்பு ஒன்றையே மேற்கொண்டு வருகின்றனர்.அனால் இந்த நிலங்களிற்கு சொந்தமான மக்கள் அடிப்படை வசதிகளற்ற நலன்புரி முகான்களிலே 25 வருடங்களிற்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.

தம்முடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி பல ஆர்ப்பாட்டங்களில் இம் மக்கள் ஈடுபட்டிருந்த போதிலும் இது வரை அம் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இராணுவம் அங்கு தொடர்ந்தும் நிலை கொண்டு தமது நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணமே உள்ளனர்.எனினும் சில வாரங்களிற்கு முன்னர் 10 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என புதிய அரசு அறிவித்திருந்தது.எனினும் இது வரை அதற்கான நடவடிக்கைகளினை ஆரம்பிக்கவில்லை.இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணி கூட மக்கள் மீள் குடியமர முடியாத காட்டுப்பகுதி என வலி.வடக்கு மீள்குடியேற்ற தலைவர் எஸ்.சஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட பகுதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராயபக்சவின் காலத்திலேயே விடுவிப்பதற்கு திட்டமிட்ட பகுதி எனவும் தற்போதைய அரசு அதனை பயன் படுத்தி தனக்கு சாதகமான குறிப்பாக செழிப்பு மிக்க நிலங்களை இராணுவம் வைத்துக்கொண்டு ஒரு சிறிய அதுவும் காட்டுப்பிரதேசத்தை மக்களிடம் கொடுத்து விட்டு சர்வதேசத்திற்கு மீள் குடியமர்த்தி விட்டோம் என காட்ட முயல்கின்றது.என சஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறன நிலையில் தான் மீள் குடியேற்ற அமைச்சருடனான சந்திப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளது.இரண்டு கட்ட சந்திப்புக்களாக இடம்பெறுகின்ற இச்சந்திப்பில் முதற் கட்ட சந்திப்பான 9 மணியளவில் இடம்பெறுகின்ற சந்திப்பில் மீள் குடியேற்ற அமைச்சர்இயாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்இயாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி என்போரும் இரணடாவது சந்திப்பான 11 மணியளவில் இடம்பெறுகின்ற சந்திப்பில் மீள் குடியேற்ற அமைச்சர்இவடக்கு மாகாண முதலமைச்சர்இவடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்க்கிடையில் இடம்பெறவுள்ளது.இச்சந்திப்பில் வலி.வடக்கில் இராணுவம் பிடித்து வைத்துள்ள காணியில் முன்னர் அறிவிக்கப்பட்ட முடிவில் மாற்றத்துடன் மக்கள் குடியேற உகந்த இடம் விடுவிக்கப்படும் அறிவிப்பொன்று வெளியிடப்படலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.