ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடரும் கைதுகள்
கடந்த 2 ஆம் திகதி மட்டக்களப்பு மாங்காட்டைச் சேர்ந்த கந்தசாமி கருணாநிதி என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடான இலங்கை்கு வந்த போது புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த மூன்றாம் திகதி டுபாயிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு – கொக்கட்டிச் சோலை 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தாமோதரம் பாஸ்கரன் என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையார் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் கொழும்பு 4ஆம் மாடியில் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.இவர்கள் நாட்டுக்கு பல தடவைகள் திரும்பி வந்த நிலையில் மஹிந்த அரசாங்கத்தில் கைது செய்யப்படாத போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாடு திரும்பும் புலம்பெயர் தமிழர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.