இளவாலைப் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணிகளையும், வீடுகளையும் விடுவிக்கக்கோரி உரிமையாளர்கள் பொலிஸ்நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 வீடுகளையும், 8 விவசாயக்காணிகளையும் உள்ளடக்கி இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளையும் வீடுகளையும் விடுவிக்கக்கோரியே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.