Breaking News

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம் - ரணில்

இலங்கையை ஸ்திரமான நாடாக உருவாக்க வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்குக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட அவர், இந்த கருத்தை வெளியிட்டதாக அவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாடு ஸ்திரப்பட தமிழர்களுடன் இணைந்து பிரச்சினையை தீர்ப்பதுடன், அதனை முன்கொண்டு செல்லவேண்டும் என்று அவர் குறிப்பிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பது குறித்து அவர் தகவல் எதனையும் வெளியிடவில்லை. போர் முடிவடைந்துள்ளது. எனினும் ஏனைய சமூகங்களுடன் இன்னும் இணைவாழ்க்கை ஏற்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் தமிழர்களும் நல்லிணக்கத்துக்கான தமது விருப்பத்தை வெளிக்காட்ட வேண்டும் என்று ரணில் கோரியுள்ளார்.

இதேவேளை போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை என்ற தமது அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.