புதிய அரசாங்கம் சர்வதேசத்தின் பொம்மை - குணதாச
சர்வதேச சமூகத்தினால் நியமிக்கப்பட்ட பொம்மை அரசாங்கமே தற்போது இலங்கையில் செயற்பட்டு வருவதாக தேசிய இயக்கங்களின் ஒன்றியம் குற்றம்சுமத்தியுள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையும் இதையொட்டியே அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன். அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது வெளியிட்ட கருத்துக்களும் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் இந்திய தலையீடுகள் பற்றி புலப்படுத்தியிருந்தன. முன்னர் பாரியளவில் குரல் கொடுத்து வந்த மாதுலுவாவே சோபித்த தேரர் போன்றோர் தற்போது அமைதியாக இருப்பதாகவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டார்.
சர்வதேச சூழ்ச்சிகாரர்களால் நியமிக்கப்பட்ட கைப்பொம்மை அரசாங்கமும், அரசியல்கள் கட்சிகளுமே தற்போது நாட்டை ஆட்சி செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.