Breaking News

இலங்கை நாடாளுமன்றில் இந்திய பிரதமர் விசேட உரை! (காணொளி இணைப்பு)

எந்த விதத்தில் பார்த்தாலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

மிக அருகில் உள்ள அயல் நாடு என்ற வகையில் மத, மொழி கலாச்சாரம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒன்றுமைகள் உள்ளன. ஒரே காலப் பகுதியில் தான் இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றன.

உலக பொருளாதாரத்தின் பிரதான பங்காளியாகவே உலகம் இந்தியாவை காண்கிறது. இதன் பிரதான உதவியாளராக இலங்கை கொண்டு வரவே இந்தியா முயற்சித்து வருகிறது. தெற்காசியாவின் அபிவிருத்தியில் இரண்டு பிரதான இயந்திரங்களாக இலங்கையும் இந்தியாவும் மாற வேண்டும்.

இந்தியாவின் செய்மதி தொழில்நுட்பத்தில் இலங்கை கூடிய பலன்களை பெற முடியும். இலங்கை பிரஜைகள் இந்தியாவுக்கு வருவதற்காக நாங்கள் ஒன் அரைவல் வீசாவை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

நான் பிறந்த இடம் புத்த மதத்தின் முக்கிய இடம். இரு நாடுகளின் இருப்புக்கும் கடல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. முன்னேற்றத்திலும், அனர்த்தங்களிலும் கைகோர்க்கும் சக்தி இரு நாடுகளுக்கும் இருக்க வேண்டும்.

எமது பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் கெடுதியான அழுத்தங்களை கொடுப்பவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். இதற்கு இடமளிக்க கூடாது. இலங்கை, மாலைதீவு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். எமது சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பு என்றார்.