Breaking News

இலங்கையில் தற்போது சிறந்த நிர்வாகம் இல்லை - மஹிந்த

இலங்கையில் தற்போது “சிறந்த நிர்வாகம்” நடைபெறுமானால் அதற்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


கைதுகள் நடைபெற வேண்டுமானால் அதற்கான பணிப்புரையை பொலிஸ் மா அதிபர் அல்லது சட்டமா அதிபர் விடுக்கவேண்டும்.  எனினும் தற்போது அரசியல்வாதிகளே அந்த பணிப்புரைகளை விடுப்பதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் இன்று கடவுள்களை பார்க்குமாறு பலவந்தப்படுத்தப்படுகின்றனர். அதனையை சிறந்த நிர்வாகம் என்று கூறுகின்றனர் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலைக்கு நேற்று சென்றிருந்த வேளையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டுமெனின் கோபமும் வெறுப்பும் கைவிடப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டு வரும் சீனாவின் போட்சிட்டி திட்டம் ரத்துச் செய்யப்படக்கூடாது. அவ்வாறு செய்யப்பட்டால் நூற்றாண்டுகளுக்கும் இலங்கையில் அபிவிருத்தி ஏற்படாது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.