மகிந்தவின் பிரதிநிதிகளாக எதிர்கட்சியினர் - விக்ரமபாகு
இலங்கையின் எதிர்கட்சி, மக்களால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் பிரதிநிதிகளாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ண இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய ஜனாதிபதியும் இணங்கியுள்ளார், பிரதமரும் இணங்கியுள்ளார்.
ஆனால் இதற்கு எதிர்கட்சித் தலைவர் நிமால்சிறிபால டி சில்வாவே எதிர்ப்பை தெரிவிக்கிறார்.அதன் காரணமாகவே தற்போது 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை. இது நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினை. கடந்த கால மோசமான ஆட்சியையை மீண்டும் எதிர்கட்சி நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.