Breaking News

19ம் திருத்தச் சட்டம் ரணிலின் ஓர் சூழ்ச்சித் திட்டமாகும் - ஹெல உறுமய

19ம் திருத்தச் சட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஓர் சூழ்ச்சித் திட்டமாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறிவர்னசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யாது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் நிச்சயம் அதனை தோற்கடிப்போம்.

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் நோக்கமாகும். மாறாக தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்யும் அரசியல் அமைப்பு ஒன்று அவசியமற்றது.

19ம் திருத்தச் சட்டம் நீதிமன்றின் ஊடாகவேனும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற காரணத்தினால் நீதிமன்றின் ஒத்துழைப்பை நாடினோம். குறைகள் களையப்பட்ட 19ம் திருத்தச் சட்டமே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தற்போதைய 19ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.