ஐ.பி.எல் 8: டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை
8வது ஐ.பி.எல் தொடரின் முதல்போட்டியில் கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியது. இதனையடுத்து நேற்றைய 2வது போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியுள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய மெக்கல்லம் 4 ஓட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரெய்னாவும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஸ்மித் 34 ஓட்டங்களும், டு பிளசிஸட 32 ஓட்டங்களும், ஜடேஜா 17 ஓட்டங்களும் எடுத்தனர். அணித்தலைவர் டோனி 30 ஓட்டங்கள் எடுக்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. பந்துவீச்சில் டெல்லி சார்பில் நாதன் கால்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 151 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அதிகபட்சமாக அல்பி மார்கல் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களும், கேதர் யாதவ் 20 ஓட்டங்களும், மயான்க் அகர்வால் 15 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் சென்னை அணி சார்பில் நெக்ரா 3 விக்கெட்டும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.








