Breaking News

பாராளுமன்றில் மஹிந்தவுக்காக எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் போராட்டம்

19வது திருத்தச் சட்டம் நாளை பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என அறிவித்து சபாநாயகர் பாராளுமனறை நாளை காலை 9.30 மணிவரை ஒத்திவைத்துள்ளார். 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற அவைக்குள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். 

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின் ஆசனத்தில் இருந்து எழுந்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவை தரையில் அமர்ந்து முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ள விடயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படுவதால் அவர்களது சிறப்புரிமை மீறப்படுவதாகவும் இவ்விடயத்தில் சபாநாயகர் தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.