Breaking News

சர்வஜன வாக்கெடுப்பு அவசியமான சரத்துக்கள் நீக்கப்படும் - ரணில்

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்ற வகையில் உயர் நீதி­மன்­றத்­தினால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள 19 ஆவது திருத்­தத்தின் சில சரத்­துக்­களை நீக்­கிக்­கொள்­வ­தாக அர­சாங்கம் நேற்று சபையில் அறி­வித்­துள்ளது.

 உயர் நீதி­மன்­றத்­தினால் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­ இரண்டு ஷரத்­துக்­களில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள ஏழு பிரி­வு­களை நீக்கி விட்டு பெரும்­பான்மை பலத்­துடன் சட்ட திருத்­தத்தை நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்துள்ளார்.

பத்­தொன்­ப­தா­வது திருத்தம் தொடர்­பாக உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்மானத்தை நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற கூட்டம் ஆரம்­ப­மா­ன­போது சபா­நா­யகர் சமல் ராஜ­ப­க்ச அறி­விப்பை வாசித்தார். இதன் பின்னர் உரை­யாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். பிர­தமர் சபையில் மேலும் உரை­யாற்­று­கையில்-

“19 ஆவது திருத்­தத்தை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்றி கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்ளும். அத்­தோடு இத்­தி­ருத்­தத்தில் சில ஷரத்­துக்கள் தொடர்­பாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்­டு­மென்றும் உயர்­நீ­தி­மன்றம் தீர்­மானம் வழங்­கி­யுள்­ளது. இதனை நீக்கி விட்டு சபையின் பெரும்­பான்மை வாக்­கு­க­ளுடன் நிறை­வேற்­று­வ­தற்கும் அரசு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும்” என்றும் பிர­தமர் அறி­வித்தார்

பிர­த­மரின் இவ்­வ­றி­விப்பின் பின்னர் அதற்கு எதி­ராக நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரீஸ் கருத்து தெரி­வித்ததார். “பத்­தொன்­ப­தா­வது திருத்தம் அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரா­னது மட்­டு­மல்ல சட்ட விரோ­த­மா­னது. எனவே இதனை ஏற்க முடி­யாது.

இத் திருத்­தத்தில் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் எவ்­வாறு எப்­படி பிர­த­ம­ருக்கும் அமைச்­ச­ர­வைக்கும் மாற்­றப்­பட போகின்­றன என்­பது தொடர்பில் தெளி­வான அர்த்­தப்­ப­டுத்­தல்கள் இத்­தி­ருத்­தத்தில் வழங்­கப்­ப­ட­வில்லை. அனைத்தும் முரண்­பா­டு­க­ளாக உள்­ளது. அர­சி­ய­ல­மைப்பை மீறாத விதத்தில் திருத்­தங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

ஜே.ஆர். இன் அர­சி­ய­ல­மைப்பு இன்றும் பல­முள்­ள­தாக உள்­ளது. ஆனால் அதற்கு இணை­யாக வந்­துள்ள 19 ஆவது திருத்­த­மா­னது அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரா­ன­தாகும். சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும். எனவே இதனை ஏற்­றுக்­கொள்­ளள முடி­யாது. ஜனா­தி­பதி பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான அதி­கா­ரங்கள் 86 ஆவது ஷரத்தின் கீழ் தெளி­வாக குறிப்­பி­ட­வில்லை. எனவே தான் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்­டு­மென உயர்­நீ­தி­மன்றம் வியாக்­கினம் வழங்­கி­யுள்­ளது.

நிறை­வேற்று அதி­காரம் தன்னிச்சையாக மேற்­கொள்ளும் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட வேண்டும். அதே­வேளை சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் மீண்டும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றோம். அதனை நாம் எதிர்க்­க­வில்லை வர­வேற்­கின்றோம். ஆனால் அத் திருத்­தங்­களை அர­சி­ய­ல­மைப்­பிற்கும் பாரா­ளு­மன்ற முறை­மைக்கும் மற்றும் சட்­டத்­திற்கும் அமை­வாக கொண்டு வந்­தி­ருக்க வேண்டும். இது வெறு­மனே அர­சியல் பிரச்­சி­னை­யல்ல. நாட்டின் இறை­மை­யுடன் தொடர்­பு­பட்ட பிரச்­சி­னை­யாகும்.

இதற்­கான திருத்­தங்கள் விவா­திக்­கப்­பட்டு ஒரே­ய­டி­யாக கொண்டு வரப்­ப­ட­வில்லை. கட்டம் கட்­ட­மாக இணைக்­கப்­பட்­டுள்­ளன.நீதி­மன்­றத்­திற்கு இத்­தி­ருத்தம் முன்­னெ­டுக்­கப்­பட்ட பின்­னரும் புதிய திருத்­தங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. நாட்டு மக்­க­ளுக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் விட­யங்கள் தெரி­யா­துள்­ளது. பரந்­த­ளவில் இது விவா­திக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி பிர­தமர் அதி­கா­ரங்கள் விட­யங்­களில் பல்­வேறு கட்­சிகள் பல்­வே­று­பட்ட விமர்­ச­னங்­களை கொண்­டுள்­ளது.

இவ்­வா­றான முரண்­பா­டு­களால் நிறைந்து காணப்­படும் திருத்தம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை வலி­யு­றுத்­தி­யுள்­ளது என்றும் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் எம்.பி. தெரி­வித்தார்.

அது­ர­லியே ரத்ன தேரர் எம்.பி.

சர்­வா­தி­கார அதி­கா­ரங்கள் நீக்­கப்­பட்ட அர்த்­த­முள்ள அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தையே நாம் எதிர்­பார்க்­கின்றோம். ஆனால் 19 ஆவது திருத்­தத்தில் நாம் எதிர்­பார்த்­தது எது­வுமே இல்லை.

பிர­தமர் எமது எதிர்­பார்ப்­புக்­களை தகர்த்து தமக்கு அதி­கா­ரங்­களை பெற்­றுக்­கொள்ளும் விதத்­திலே திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அத்­தோடு இத்­தி­ருத்தம் தொடர்­பி­லான தீர்­மானம் ஆங்­கி­லத்தில் மட்­டுமே வழங்­கப்­பட்­டுள்­ளது. இதனை அனை­வரும் தெரிந்து கொள்ளும் வகையில் சிங்­களம் தமிழ் மொழி­க­ளிலும் வழங்­கப்­பட வேண்டும்.

இத்­தி­ருத்தம் தொடர்­பாக மக்­க­ளுக்கு எதுவும் தெரி­யாது. ஐ.தே. கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் இது தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.அத்­தோடு இத் திருத்தம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு தள்ளி விடும் நிலை­மையை தோற்­று­வித்­துள்­ளது. எனவே இதில் மீண்டும் அர்த்­த­முள்ள திருத்­தங்­களை கொண்டு வந்து மீண்டும் அதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட வேண்டும் என்றார்.

சுசில் பிரேம் ஜயந்த எம்பி

இத்­தி­ருத்தம் தொடர்பில் உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்­மானம் கிடைத்து விட்­டது. எனவே அது தொடர்பில் மீண்டும் நீதி­மன்றம் செல்ல முடி­யாது. எனவே திருத்தம் தீர்­மானம் அனைத்தும் தமிழ், சிங்­கள மொழியில் அனைத்து எம்.­பி.­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும் என்றார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இவ்­வி­ட­யத்தை மீளவும் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் வெளி­யிட கோரு­வது நடை­முறை சாத்­தி­ய­மற்­ற­தாகும். மீண்டும் நீதி­மன்­றத்தை நாட முடி­யாது சட்­டமா அதி­பரின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்­க­மை­யவே திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்றார்.

அநுர திசா­நா­யக்க எம்.பி.

அர­சி­ய­ல­மைப்­புக்­குள்­ளாகி சர்­வ­தி­கா­ரத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக 18 ஆவது திருத்­தத்தை அவ­ச­ர­மாக நிறை­வேற்­றிக்­கொண்ட போது, 19ஐ இன்று எதிர்க்கும் அதற்கு சட்ட விளக்கம் தரும் பேரா­சி­ரியர் என்ன செய்தார்? அதன் போது கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருக்­க­லாமே? திவி­நெ­கும சட்ட மூலம் அவ­ச­ர­மாக பெயர் மாற்­றப்­பட்டு கொண்டு வரப்­பட்ட போதும் கடந்த காலங்­களில் தாமதிக்கப்பட்டது.

கட்டம் கட்­ட­மாக 19 ஆவது திருத்தம் இணைப்புகளாக உள்­ளது என கூறு­ப­வர்கள் இந்த அர­சி­ய­ல­மைப்பு 18 தட­வைகள் திருத்­தப்­பட்­டதை மறந்து விட்­டனர். 19 ஆவது திருத்தம் ஜன­நா­ய­கத்­துக்­கான ஒரு திசை­காட்டி. எனவே தொழில் நுட்ப பிழை­களை பெரி­து­ப­டுத்தி அதனை தடுக்க வேண்டாம் என்றார்.

தினேஷ் குண­வர்த்­தன எம்.பி.

அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் தேவை அதனை ஏற்­றுக்­கொள்­கிறேன். ஆனால் அதற்கு பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களை மீறிய திருத்­தங்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல

அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பாக தீர்­மானம் வழங்கும் அதி­காரம் உயர் நீதி­மன்­றத்­துக்கு மட்­டுமே உள்­ளது.

எனவே உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்­மா­னத்தை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். 18ஆவது திருத்­தத்தை ஒரே நாளில் கொண்டு வந்து நிறை­வேற்­றி­னார்கள். ஆனால் நாம் 19ஆவது திருத்­தத்தை விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தியே நிறை­வேற்ற முயற்­சிக்­கின்றோம் என்றார்.

அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் ஆட்­சிக்­கா­லத்தில் நீதி­மன்­றங்­க­ளுக்கு தொலை­பேசி மூலம் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டே நீதி­மன்­றத்தின் தீர்­மா­னங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் இன்று எந்­த­வி­த­மாக அச்­சு­றுத்­தலும் இல்லை. 18ஆவது திருத்­தத்­திற்கு நானும் வாக்­க­ளித்தேன். ஆனால் வாக்­க­ளித்­த­வர்கள் அனைவரும் மனச்சாட்சியை தட்டிக்கேளுங்கள் விருப்பத்துடனா வாக்களித்தீர்கள் என அப்போது உண்மை புரியும்.

இது தனி நபருக்கு அதிகாரத்தை வழங்கும் விடயமல்ல. பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. ரணில் அல்ல எவர் பிரதமர் பதவிக்கு வந்தாலும் அவருக்கு அதிகாரம் கிடைக்கும் என்றார்.

வாசுதேவ நாணயக்கார

18ஆவது திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அதனை வரவேற்கின்ற அதேவேளை 17வது திருத்தத்தினை மீண்டும் கொண்டு வந்து சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளமையையும் வரவேற்கின்றேன். அரசாங்கத்தின் 19ஆவது திருத்தத்தின் மூலம் இவைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

எனவே 19ஆவது திருத்தத்தில் பாரிய பிரச்சினைகள் எதும் இல்லை. இதனை பிரச்சினையாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.