நீண்ட நாட்களுக்குப் பின் வெளியில் சுதந்திரமாக நடமாட வாய்ப்பு - ரணில்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனக்கு பயமின்றி வெளியில் நடமாடக் கூடிய சுதந்திரம் கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களும் இன்று விடுதலை அடைந்திருப்பதாக தெரிவித்த பிரதமர், முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியிலிருந்த வெள்ளை வான் கலாசாரம் தற்போது இல்லை என்றும் அவர் கூறினார். அம்பாறை மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்த பிரதமர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
பீல்ட் மார்ஷல் ஜெனரல் சரத் பொன்சேனாவுக்கு நீதியற்ற வகையில் வழக்கு தொடர்ந்தமை மற்றும் முன்னாள் பிரதமர நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை 24 மணிநேரத்திற்குள் திவியிலிருந்து இறக்கியமை போன்ற முன்னாள் அரசாங்கம் செய்த கீழ்மட்ட அரசியலை புதிய அரசாங்கம் செய்யப் போவதில்லை என்றும் உறுதியளித்தார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குதலே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்








