Breaking News

விசாரிக்க முடியாதென்றால் நீதிமன்றம் சென்று தடையுத்தரவை பெறுங்கள் - ரணில் ஆவேசம்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவினால் விசா­ரிக்க முடி­யா­தென்றால் அதனை எதிர்த்து நீதி­மன்றம் சென்று தடை­யுத்­த­ரவை பெற்றுக்கொள்­ளுங்கள் என எதிர்க்கட்­சி­யி­ன­ருக்கு நேற்று சபையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆலோ­சனை வழங்­கினார்.

மஹிந்த ராஜ­பக்ஷ முன்னாள் ஜனா­தி­ப­தியே தவிர பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இல்லை. எனவே, அவ­ருக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு க்­கான சிறப்­பு­ரி­மைகள் கிடை­யாது என்றும் பிர­தமர் சபையில் தெரி­வித்தார்.

சபா­நா­யகர் சமல் ராஜ­பக்ஷ தலை­மையில் நேற்று திங்­கட்­கி­ழமை காலை 9.30 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூடி­யது. இதன் போது முன்னாள் ஜனா­தி­பதி லஞ்ச ஊழல் திணைக்­க­ளத்­திற்கு விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டது தொடர்பில் எதிர்­கட்­சி­யினர் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டனர். எதிர்­கட்­சி­யி­னரின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் பிர­தமர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து எவரும் கட்சி மாற வில்லை. அவ்­வாறு கட்சி தாவி எவரும் அர­சுடன் இணை­ய­வில்லை.சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆவார். எனவே ஜனா­தி­பதி தான் அமைச்சர் பத­வி­களை வழங்­கினார்.

எனவே இதனை கட்சித் தாவல் என அர்த்­தப்­ப­டுத்த முடி­யாது. அரசின் 100 நாள் திட்­டத்தை முன்­னெ­டுக்­கவே அமைச்சர் பத­விகள் வழங்­கப்­பட்­டது. இலஞ்ச ஊழல் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் எனது துணை­வி­யாரின் நண்பர் என விமல் வீர­வன்ச எம்.பி குற்றம் சாட்­டு­வதை நிரா­க­ரிக்­கின்றேன்.

இப் பிரச்­சி­னையில் எனது துணை­வி­யாரை தொடர்பு படுத்­த­வேண்டாம். இத் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­களில் நான் தலை­யி­டு­வதும் இல்லை, அழுத்தம் கொடுப்­பதும் இல்லை. ஆணை­யாளர் நாய­கத்தை நான் நிய­மிக்­கவும் இல்லை. கடந்த கால ஆட்­சி­யா­ளர்­களால் நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் தான் இத்­தி­ணைக்­க­ளத்தின் தலை­வர்­க­ளாக இன்னும் பணி­யாற்­று­கின்­றனர். திஸ்ஸ அத்­த­னா­ய­கா­வுக்கு அமைச்சர் பதவி வழங்­கி­யது தொடர்பில் சாட்­சி­ய­ம­ளிக்­கவே முன்னாள் ஜனா­தி­பதி அழைக்­கப்­பட்­டுள்ளார்.

அவ்­வாறு ஜனா­தி­ப­தியை விசா­ரிக்க முடி­யா­தென்றால் அது சிறப்­பு­ரிமை மீறல் என்றால் அது தொடர்பில் நீதி­மன்றம் சென்று அதற்கு எதி­ராக தடை­யுத்­த­ரவை பெற்றுக் கொள்­ளுங்கள்.அர­சாங்கம் அனைத்­தையும் சட்­டப்­ப­டியே முன்­னெ­டுக்­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை நான் தான் பாது­காப்­ப­தாக ஊட­கங்­க­ளிலும் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.அவர் தோல்வி கண்ட ஆரம்ப நாட்­களில் இன்று கூச்­ச­லி­டுவோர் எவரும் அவ­ரைபோய் பார்க்­க­வில்லை. நான் தான் தொலைப்­பே­சியில் பேசினேன்.முன்னாள் ஜனா­தி­ப­திக்கு உரிய கவ­னீர்ப்பு கிடைக்­க­வில்­லை­யென்றால் அது எனது பிழை­யல்ல அதற்கு பொறுப்­பா­னவன் நானல்ல.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இப்­பி­ரச்­சி­னையை பேசுங்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கேளுங்கள் நான் இது தொடர்பில் எத­னையும் செய்ய முடி­யாது. இது தொடர்­பாக விவாதம் நடத்­தவும் தயார்.  முன்னாள் ஜனா­தி­பதி அர­சியல் தலை­மைத்­து­வத்தை வழங்­கி­யி­ருக்­கலாம்.ஆனால் யுத்­தத்தை வெற்­றி­கொண்­டவர் சரத் பொன்­சேகா. அவரை சிறையில் அடைத்த போது எவரும் பேச­வில்லை.

இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கொலை செய்ய விடு­தலைப் புலிகள் குண்டுத் தாக்­குதல் நடத்­தினர், கொல்ல முயற்­சித்­தார்கள். யார் அப்போது பேசினார்கள் அன்று அவர் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார்.

எவரும் பேசவில்லை

ஜனாதிபதி தேர்தலில் என்னை தோல்வியடையச் செய்வதற்காக பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.சர்வதேச விசாரணை நடத்தப்படுமென பான் கீன் மூனிடம் உறுதி மொழி வழங்கியது யார்.இவையெதனையும் நாங்கள் செய்யவில்லை என்றும் பிரமர் தெரிவித்தார்.