Breaking News

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் முன் தீர்ப்பை வழங்க முடியாது - அமெரிக்கா

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் முன்கூட்டியே கருத்துக் கூற முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் தொழில் உரிமைகள் உதவி செயலாளர் டொம் மாலிநொவ்ஸ்கி இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிந்த அவர் நேற்று அளித்த செவ்வி ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பிரதிபலிப்பு வரை தமது நாடு காத்திருக்கபோவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மக்களின் ஆதரவுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மக்களின் உதவியுடன் இந்த பணிகளை செய்ய இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளமையை அமெரிக்கா வரவேற்கிறது. இலங்கை அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் கருத்துரைத்துள்ளார்.

வடக்கு, கிழக்கை பொறுத்தவரை அங்கு மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. காணாமல் போனோர், அரசியல் கைதிகள் மற்றும் வாழ்வாதாரம் என்று பல்வேறு தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் உள்ளன. எனவே அரசாங்கம் திறந்த நிலையில் பிரச்சினைகளை அணுகும் போதே அனைத்து மக்களின் சந்தேகங்களையும் நிவர்த்தித்து முன்செல்ல முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்