பொதுபல சேனாவின் செயற்பாடுகளில் சம்பிக்கவுக்கும் பங்குண்டு - அம்பலப்படுத்தும் மகிந்த
பொதுபல சேனா போன்ற அமைப்புக்களால் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்ற போது அது தொடர்பாக அமைச்சரவையில் நான் கலந்துரையாடினேன்.
அப்போதெல்லாம் அந்த அமைப்புக்கு எதிராதக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சம்பிக்க ரணவக்கவே வலியுறுத்தினார். அதனால்தான் அதுபோன்ற அமைப்புக்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்களித்துள்ள நோர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ, பொதுபல சேனாவின் செயற்பாடுகளில் சம்பிக்க ரணவக்கவுக்கும் பங்கிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டார்.
“பொதுபல சேனாவின் செயற்பாடுகளால் அரசாங்கத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் முஸ்லிம் மக்கள் மத்தியில் தவறான மனப்பாங்கு ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் இதனை சரியான முறையில் அடையாளங்கண்டு தமக்குச் சாதகமான முறையில் பய ன்ப டுத் திக்கொண்டார்கள்.
இதன்மூலம் முஸ்லிம் வாக்குகள் எனக்குக் கிடைக்காமல் செய்யப்பட்டன. முஸ்லிம் வாக்குகள் எனக்குக் கிடைக்காமல்போனதுதான் எனது தோல்விக்கு முக்கிய காரணம்.
தமிழ் மக்கள் எனக்கு வாக்ளிக்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெரிந்தேயிருந்தது. அவர்கள் நீண்டகாலமாக பெரிதும் போற்றிய அமைப்பை நான் அழித்தொழித்தமையால் என்மீது அவர்கள் சீற்றமடைந்திருந்தார்கள். அதனால், அவர்களுடைய வாக்குகள் கிடைக்கும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆனால், முஸ்லிம் மக்களுடைய வாக்குகளையும் எனக்குக் கிடை க்காமல் செய்தமைக்கு பொதுபல சேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான செய ற் பாடுகளே காரணம்.
பொதுபல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் என்னைத் தடுத்தவர் சம்பிக்க ரணவக்கதான். அமைச்சரவையில் இது தொடர்பில் ஆராயப்பட்டபோது, பொதுபல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என சம்பிக்கதான் என்னை வலியுறுத்தினார்” எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.










