சச்சினுக்கு இன்றைய தினம் பிறந்த நாள்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தனது வாழ்க்கையின் பாதிக் காலத்தை கிரிக்கெட்டிலேயே கழித்த பெருமை சச்சினுக்கு உண்டு அத்துடன் இவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் செய்யாத சாதனைகள் இல்லை என்றே கூற வேண்டும்.
16 மாதங்களுக்கு முன்புதான் சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார். எல்லா வீரர்களையும் விட சற்று உயர்வான நிலையில்தான் சச்சினின் சாதனைகள் இன்னும் உள்ளன.
அவரது பல சாதனைகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் உடைக்க முடியாத அளவிலுள்ளது. கிட்டத்தட்ட 25 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வாழந்ந்துள்ளார் சச்சின் என்பது மிகவும் ஆச்சரியமானது, இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்லமல் உலக கிரிக்கெட்டிலும் சச்சின் பதித்த முத்திரைகள் ஏராளம்.
தற்போது ஓய்வுக்குப் பின்னர் கேரளா பிளாஸ்டர்ஸ் என்ற கால்பந்து அணியை நிர்வகித்து வருவதுடன் போட்டிகள் குறித்த கருத்துக்களையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.








