Breaking News

நான் ஏன் வந்தேன் - பசில்

சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரமுகர்கள் வெளியேறும் வாயிலின் ஊடாக வெளியேறிய அவர், அதன் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் (வி.ஐ.பி), வாயிலின் அடியில் நுழைந்து வெளியேவந்தார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரமுகர்கள் வெளியேறும் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் வாயில் மூடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய பசில் ராஜபக்ச, வெளியில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.அதேவேளை, பசில் ராஜபக்சவை வரவேற்க முன்னைய அரசாங்கத்தின் பிரமுகர்கள் எவரும் விமான நிலையத்துக்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.