அரசியல் ரீதியாக பலமடைந்துள்ளார் மஹிந்த- இந்திய ஊடகம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியாக மீண்டும் பலமடைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் குறித்து மக்களின் பாராட்டுக்கள் குறைவடைந்து கொண்டிருப்பதாகவும் குறித்த ஊடகச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள் குறித்து அரசாங்கத்திடம் தெளிவான நிலைப்பாடு இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும் எனவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. 400 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பத்திரங்கள் விநியோகம் தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றத்தில் அதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளமையானது, அரசாங்கம் தோல்வியடைந்ததற்கான உதாரணமாகும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவமேற்றிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் நடாத்தப்படுகின்ற மக்கள் பேரணியில், கலந்துக்கொள்வதனையும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.








