டயஸ்போராவின் தேவைகளுக்காக சிலர் செயற்படுகின்றனர்!- மஹிந்த
தமிமீழ விடுதலைப் புலிகள் டயஸ்போராவின் தேவைகளுக்காக சிலர் தற்போது செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புத்தளம் - தும்மலதெனிய விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் செய்ய முற்பட்டதையே தற்போது அரசாங்கத்திலுள்ள சிலர் செய்ய முற்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.








