Breaking News

வடக்கு குடிநீர் பிரச்சினை குறித்து ஜனாதிபதி விசேட கவனம்!

வடக்கு குடிநீர் பிரச்சினை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நேற்று  மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என ஜனாதிபதி இங்கு தெரிவித்துள்ளார். 

இப்பிரச்சினை குறித்து வடக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் தொடர்ந்து கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  மேலும் வடக்கில் சுற்றாடல் அழியை ஏற்படுத்திவரும் அநாவசிய மணல் அகழ்வு தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கருத்து கேட்டுள்ளார். 

யாழ். வலிகாமம் பகுதி குடிநீரில் அசுத்த திரவம் கலந்துள்ளதாகவும் அந்த நீரை பருகும் மக்கள் சுகாதார கேடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.