Breaking News

பிரபாகரன் எவ்வாறு உருவாகினார்! மைத்திரி கண்டுபிடிப்பு

இன ரீதியான பிளவுகள் காரணமாகவே பிரபாகரன் போன்ற தீவிரவாதிகள் உருவானதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து கொண்டால் மாத்திரமே நாடு என்ற வகையில் முன்னோக்கி செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

நாட்டில் தற்போது கிடைத்துள்ள ஜனநாயகம், சுதந்திரத்தை மாத்திரமல்லாது ஊடக சுதந்திரத்தையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.