Breaking News

என்னை தோற்கடிக்க உலகமே பரப்புரையில் ஈடுபட்டது! அல்- ஜசீராவுக்கு மகிந்த நேர்காணல்

நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.அல்-ஜசீரா தொலை க்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவீர்களா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, அதை நான் கூறமாட்டேன், ஆனால், போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செவ்வியில் அவர், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் தோற்கடிக்கப்பட்டது ஒரு சதி என்றும், தனக்கு எதிராக உலகமே பரப்புரையில் ஈடுபட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைவது தெரிந்தவுடன், அலரி மாளிகையில், ஆட்சியைத் தக்கவைக்க சதித்திட்டம் தீட்டியதான குற்றச்சாட்டையும் இந்தச் செவ்வில் அவர் நிராகரித்துள்ளார்.

தோல்வியடைவது உறுதியானதும் தாம் அதிகாரத்தை ஒப்படைக்க முடிவு செய்து விட்டதாகவும், ஒரிரு மணித்தியாலங்களுக்குள் அதிகாரத்தைக் கைப்பற்றும் சதித்திட்டம் தீட்டுவதென்பது முடியாத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச இது ஒரு நகைச்சுவையான குற்றச்சாட்டு என்றும் வர்ணித்துள்ளார்.