தேர்தல் முறைமையை மாற்றும் சட்டம் 13 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்
தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பான 20 ஆம் திருத்தச் சட்ட வரைபு எதிர்வரும் 13ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 20 ஆம் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 13 ஆம் திகதி கூடவுள்ள அமைச்சரவையில் அனுமதி பெறுவதற்காக இந்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படும். இந்த சட்டமூலத்தின் பிரகாரம் தொகுதி, விகிதாசாரம் கலந்த தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுவதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.