அனைத்து உள்ளூராட்சிமன்றங்களும் 15ம் திகதி கலைக்கப்படும்
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் இம் மாதம் 15ம் திகதியளவில் கலைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதூங்க தெரிவித்துள்ளார்.
இவற்றின் கால எல்லை மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், நாட்டில் புதிதாக ஏற்பட்ட அரசியல் நிலைமை காரணமாக அவற்றின் கால எல்லை நீடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் அதேவேளை, இங்கு இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய விஷேட குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதூங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.