ஜெ.யுடன் இன்று பதவியேற்கும் 28 அமைச்சர்கள்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்று இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் புதிய தமிழக அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. புதிய அமைச்சரவையில் 29 அமைச்சர்கள் இடம் பெறுகிறார்கள்.
கடந்த 7 மாதங்களாக வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை பெற அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வேண்டுதல் செய்து வந்தனர். இவற்றை கவனித்து வந்த ஜெயலலிதா, அமைச்சர்கள் பலரின் மீது வந்த பல்வேறு முறைப்பாடு குறித்தும் பட்டியல் தயாரித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல அமைச்சர்களின் மத்தியில் பரபரப்பு நிலவியது.
தற்போதுள்ள அமைச்சரவையில், பெண் தொடர்பான முறைப்பாடுகளுக்கு ஆளான வர்கள், அதிக அளவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்கள் என்று பட்டி யல் தனித்தனியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பெயர் பட்டி யல்:
1.ஜெயலலிதா (முதல்வர்), 2.பன்னீர் செல்வம், 3.நத்தம் விசுவநாதன், 4.வளர்மதி, 5. செல்லூர் ராஜு, 6.வைத்தியலிங்கம், 7.எடப்பாடி பழனிச்சாமி, 8.மோகன்,9.தோப்பு வெங்கடாசலம், 10.விஜய பாஸ்கர், 11.அப்துல் ரஹீம், 12.செந்தில் பாலாஜி, 13.கோகுல இந்திரா, 14.பழனியப்பன், 15.காமராஜ், 16.வேலுமணி, 17.வீரமணி, 18.பூனாட்சி, 19.சின்னையா, 20.தங்கையா, 21.ஆர்.பி.உதயகுமார், 22.எம்.சி.சம்பத், 23.சுந்தரராஜ், 24.சண்முகநாதன், 25.முக்கூர் சுப்பிரமணியன், 26.ரமணா,27.ஜெயபால், 28.என்.சுப்பிரமணியன், 29.ஆனந்தன்