புலிகளுக்கு நிதி சேகரித்த 5 தமிழர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றத்தினால் நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், குற்றம்சாட்டியுள்ள ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம், இதற்காக சிறைத்தண்டனைகளை விதித்துள்ளது.
இவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம், 75 மாதங்கள் வரையாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது.
2011ம் ஆண்டு இவர்களை நெதர்லாந்தின் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்திருந்த போதிலும், தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் தண்டனை அளித்திருக்கவில்லை என்பது