Breaking News

தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியபோது, தென்னிந்தியாவிற்கு சென்று, அங்கு தங்கியிருந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.

தமிழகத்தின் அகதி முகாம்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய தலையீட்டினால், நாடு திரும்பவுள்ளனர்.

இலங்கையர்கள் இரண்டு விமானங்கள் மூலம் இன்று முற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இந்த மக்கள், அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர்.