Breaking News

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழு ஓகஸ்ட் மாதம் இலங்கை வருகிறது

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக் குழு, வரும் ஓகஸ்ட் 3ம் நாள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரில் இலங்கை வரவுள்ள இந்தக் குழு, எதிர்வரும் ஓகஸ்ட் 12ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று, இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே, தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் ஐந்து பேர் இடம்பெற்றிருப்பர். இவர்கள் போர்க்காலத்தில் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

இந்தக் குழுவின் பயணத்துக்கான வசதிகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.