காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின்விசாரணை களுக்கென இவ் வாரம் நான்கு விசேட குழுக்கள் அமைக்க ப்படவுள்ளன.
இது தொடர்பான தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி விசாரணைக் குழுவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார். ஜனாதிபதியிடம் அண்மையில் கையளித்த அறிக்கையில் விசாரணைக்கென நான்கு பேர் அடங்கிய நான்கு விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 16,000 முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.