Breaking News

தான் இல்லாத காரணத்தினால் கொழும்பு குப்பையாகிவிட்டதாம் - மஹிந்த கவலை

´நாங்கள் இல்லாத நான்கு மாதங்களில் கொழும்பு குப்பையாகி விட்டது´ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

24 மணிநேரமும் பழிவாங்கும் சிந்தனையில் அரசாங்கம் இருப்பதால் ஏனைய வேலைகள் சரிவர இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.  நாராஹென்பிட்டி அபயாராம விகாரையில் இன்று (26) மகளிர் அணியொன்றை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மஹிந்த ராஜபக்ஷ நாட்டுப் பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ பெண்களுக்கு வேலைப் பெற்றுக் கொடுத்தது, அவர்களுக்காக பாடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரியும் என்று கூறினார்.