Breaking News

முல்லைத்தீவு வெலிஓயா காடுகளை அழிக்கும் இராணுவம்

முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் உள்ள காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில்  இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதிகளில் உள்ள இராணு முகாங்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களுக்குப் பின்புறமாக உள்ள காடுகளே இவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றது. இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே மனித வலுக்களைக் கொண்டே காடுகள் வெட்டி அகற்றப்பட்டு தீவைக்கப்படுகின்றது.

புதிதாக இராணுவ முகாங்களை அமைத்துக் கொள்வதற்காகவும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாங்களை விஸ்தரிக்கும் முகமாகவும் இக் காடுகள் அழிக்கப்படுகின்றது.

சிங்களக் குடியேற்றத்திற்கு பின்புறமாகவும் இவ்வாறான காடழிப்புகள் நடைபெறுகின்றது. இதனால் புதிய சிங்கள குடியேற்றங்கள் அங்கு நடைபெறப் போகின்றதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.