Breaking News

மும்பையுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது சென்னை

எட்­டா­வது ஐ.பி.எல். போட்டித் தொடரின் இறு­திப்­போட்­டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்­தியன்ஸ் அணியும் நாளை மோது­கின்­றது.

முத­லா­வது இறு­திப்­போட்­டிக்­கான தகுதிச் சுற்றில் சென்­னையும் – மும்­பையும் மோதி­யது. இந்­தப்­போட்­டியில் சென்னை அணியை வீழ்த்­திய மும்பை இறு­திப்­போட்­டிக்கு முத­லா­வது அணி­யாகத் நுழைந்­தது.

அதைத் தொடர்ந்து நீக்கல் சுற்றில் நேற்று பெங்­களூர் அணியை 3 விக்­கெட்­டுக்­களால் வீழ்த்­திய சென்னை அணி இறு­திப்­போட்­டிக்குத் தகு­தி­பெற்­றது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்­டா­வது தகு­திச்­சுற்று நேற்­றி­ரவு 8 மணிக்கு தோனியின் சொந்த ஊரான ராஞ்­சியில் நடந்­தது.

இதில் சென்­னை-–­பெங்­களூர் அணிகள் மோதின. நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி களத்­த­டுப்பைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பெங்­களூர் அணியின் கிறிஸ் கெய்ல், கோஹ்லி தொடக்க வீரர்­க­ளாக களம் இறங்­கி­னார்கள். ஆரம்பம் முதலே சென்னை அணியின் பந்­து­வீச்­சுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் பெங்­களூர் அணி வீரர்கள் தடு­மா­றினர்.

போட்­டியின் 5ஆ-வது ஓவரை நெஹ்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கோஹ்லி 12 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். இரண்­டா­வது விக்­கெட்­டிற்­காக கள­மி­றங்­கிய மற்­றொரு அதி­ரடி வீர­ரான டிவி­லியர்ஸ் அதே ஓவரின் கடைசி பந்தில் ஒரு ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழந்தார்.

அதன்பின் வந்த சந்தீப் சிங் 8-ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆட்­ட­மி­ழந்தார். இதனால் பெங்­களூர் அணி 7.1 ஓவரில் 36 ஓட்­டங்­களை எடுப்­ப­தற்குள் முக்­கிய மூன்று விக்­கெட்­டு­களை இழந்­தது. மறு­பக்கம் அதி­ரடி வீரர் கெய்ல் நின்­றாலும் அவரால் அதி­ர­டி­யாக ஆட முடி­ய­வில்லை. சுரேஷ் ரெய்னா 14-ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்­து­களில் சிக்சர் அடித்த கெய்ல் அடுத்த பந்தில் ஆட்­ட­மி­ழந்தார். கெய்ல் 43 பந்­து­களில் 41 ஓட்­டங்­களை மட்­டுமே அணிக்­காகப் பெற்­றுக்­கொ­டுத்தார்.

அதன்பின் வந்த இளம் வீரர் சர்­பராஷ் கான் 21 பந்தில் 31 ஓட்­டங்­களை எடுக்க பெங்­களூர் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்­பிற்கு 139 ஓட்­டங்­களை எடுத்­தது. சென்னை அணி தரப்பில் நெஹ்ரா மூன்று விக்­கெட்­டுகள் வீழ்த்தி அசத்­தினார்.

140 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் கள­மி­றங்­கிய சென்னை அணியின் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர்­க­ளாக ஸ்மித் மற்றும் ஹசி ஆகியோர் கள­மி­றங்­கி­னார்கள். இதில் ஸ்மித் 17 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, ஹசி அதி­ர­டி­யாகத் துடுப்­பெ­டுத்­தாடி 56 ஓட்­டங்­களை விளா­சினார். அடுத்­த­தாக பிளசிஸ் 21 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழக்க, தொடர்ந்து கள­மி­றங்­கிய சுரேஷ் ரெய்னா ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் வந்­த­வே­கத்­தி­லேயே மைதா­னத்தை விட்டு வெளி­யே­றினார். 

அணித் தலைவர் தோனியும், நேகியும் ஜோடி சேர்ந்து அணியை வெற்­றிப்­பா­தைக்கு அழைத்துச் சென்­றனர். வெற்றி ஐந்து ஓட்­டங்கள் தேவை என்ற நிலையில் இருந்­த­போது நெகி 12 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, பிராவோ கள­மி­றங்­கினார். அவர் எதிர்­கொண்ட முதல் பந்­தி­லேயே ஆட்­ட­மி­ழந்து பெவி­லியன் திரும்ப ஜடேஜா கள­மி­றங்­கினார். 

இறு­தியில் வெற்றிக்கு மூன்று பந்துகளுக்கு ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையில் இருந்தபோது தோனி 26 ஓட்டங்களுடன் ஆட்ட மிழக்க, அடுத்துக் களமிறங்கிய அஸ்வின் அந்த ஒரு ஓட்டத்தைப் பெற்று வெற்றியை உறுதிசெய்தார். பெங்களூர் அணி சார்பாக பந்துவீசிய சஹால் இரண்டு விக்கெட்டுக் களையும், அர்விந்த் மற்றும் விஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.