Breaking News

வித்தியா கொலை வழக்கில் சட்டத்தரணிகள் ஆஜராகாமல் இருப்பது சரியா?

புங்குடுதீவு பள்ளிச்சிறுமி பாலியல் கொடூரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத் துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கும், அந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தின் போது யாழ். நீதிமன்றத்தின் மீது கற்கள் எறியப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களுக்கும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராகக்கூடாது என்ற கோரிக்கைகள் பரவலாக முன்வைக்க பட்டிருக்கின்றன. 

ஆனால், சந்தேகநபர்களுக்கு வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் தவிர்ப்பது நீதி நடைமுறையைப் பாதிக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான சி.வி. விவேகானந்தன் தெரிவித்தார். 

சந்தேநபர்களுக்காக ஆஜராக முன்வரும் வழக்கறிஞர்களை தடுப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றமாகும் என்றும் சி.வி. விவேகானந்தன் கூறுகின்றார். சந்தேகநபர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டியதன் அவசியத்தை முன்னைய நீதிமன்றத் தீர்ப்புகளும் அரசியலமைப்பு ஏற்பாடுகளும் ஐநா உடன்படிக்கைகளும் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.