Breaking News

இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று செவ்வாய் க்கிழமை முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இவருடன் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இன்று தொடக்கம் மே 18 வரை நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படும் என ஏற்கனவே சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார். இதற்கமைய இன்று முள்ளிவாய்க்காலுக்குச் சென்ற குழுவினர் அங்கு நினைவுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் வாரத்தை ஆரம்பித்து வைத்தார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூரும் விதத்தில் இராணுவ முகாமிற்கு அண்மையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண சபை பிரதி அவைத்தலைவா் அன்ரனி ஜெகநாதன் முல்லைத்தீவு மாவட்ட வட மாகாணசபை உறுப்பினா் ரவிகரன் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினா் திருமதி மேரி கமலா குணரத்தினம் மற்றும் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவா் சஜீவன் ஆகியோா் மற்றும் பொது மக்கள் ஊடகவியலாளா்கள் எனப் பலா் கலந்து கொண்டனா்.