ஐ.பி.எல். சூதாட்டத்தில் பாக்.கிற்கும் தொடர்பாம்
ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக டில்லியில் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பாகிஸ்தானை சேர்ந்த புக்கி ஒருவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. ஐ.பி.எல்., போட்டிகளை மையமாக வைத்து கடந்த மார்ச் 19ஆம் திகதி குஜராத்தின் வதோதராவில் சூதாட்டம் செய்த ‘புக்கிகள்’, ஆமதாபாத் சிக்கினர். இதில் தொடர்புடைய 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மீண்டும் சூதாட்டம் குறித்து டில்லியில் உள்ள கரோல் பாக், சாஸ்திரி நகர் மற்றும் குர்கானில் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்களுடன் ஆமதாபாத் அதிகாரிகளும் இணைந்தனர். இதில், 250 கைபேசிகள், 10 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டன. இந்த சூதாட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ‘புக்கி’ ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.