வித்தியாவின் கொலை விவகாரம்! புங்குடுதீவில் பதட்டம்
புங்குடுதீவு மாணவியை வன்மு ணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் ஐவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரையும் மக்கள் தம்மிடம் ஒப்படைக்க கோரி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.
அத்துடன் வீதி மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அதனால் புங்குடுதீவு ஊர்காவற்துறை மற்றும் வேலனை பிரதேசங்களில் பதட்டமான நிலமை காணப்படுகின்றது.
மாணவியின் கொலை தொடர்பில் கடந்த வியாழக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.