பொதுத் தேர்தல் எப்போது என்பது குறித்து என்னிடம் பதில் இல்லை!
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 அல்லது 66 நாட்களில் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து இதுவரை தனக்கு தெரியப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் தீயணைப்புப் படையை விட வேகமாக இவற்றை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தன்னால் காலை ஏழு மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி மாலை 04.00 மணிக்கு நிறைவடையும் என்பதையே கூறமுடியும் எனவும், எப்போது தேர்தல் நடைபெறும் என்பதற்கான பதில் தன்னிடம் இல்லை எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.