மைத்திரிபால – மஹிந்த இடையே மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே மற்றுமொரு சந்திப்பு நடத்தப் படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுத்திரக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் இந்த சந்திப்பை நடத்த கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 6-ம் திகதி இருவருக்குமிடையே பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இருவருக்குமிடையே சந்திப்பு இடம்பெற்ற போதும் அதன்போது இணக்கப்பாடுகள் ஏற்பட்டிருக்காத நிலையிலேயே மீண்டும் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதற்கு கட்சியினர் முயற்சித்துள்ளனர்.