Breaking News

இலங்கைத் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பது பாஜகவின் கடமை- முரளிதரராவ்

இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழர்களின் நலன்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக, பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

“இந்தியப் பிரதமர் மோடி இலங்கையில் உள்ள தமிழர்கள் விடயத்தில் கூடுதல் கரிசனை கொண்டுள்ளார். அவரே யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர்” என்றும் குறிப்பிட்டார்.

பங்களாதேசின் இந்து அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குவது போல இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த முரளிதரராவ், “இவையிரண்டும் வேறுபட்ட விவகாரங்கள் என்று கூறினார்.

பங்களாதேசில் இந்துக்களின் மத மற்றும் மனித உரிமைகள் நசுக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இலங்கையில், தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு பாஜக அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.