Breaking News

கோப்பாய் சந்தியில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு

கைதடியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் யாழில் இருந்து பருத்துறை நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த திருகோணமலையை சேர்ந்த அன்ரனி யூட் பிரகாஸ் வயது 45 என்பவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். மேலும் முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்திருந்ததுடன் ஏனையோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும், மழையின் காரணமாகவே இவ் விபத்து நேர்ந்ததாகவும் விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்திருப்பதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.