மகிந்த அமைத்த இராணுவ பாதுகாப்பு பிரிவு அதிரடி நீக்கம்!
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப் பட்டிருந்த இராணுவத்தினர் அப்பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜி.வி. ரவிப்பிரிய தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்த இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இராணுவ தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமையவே இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வாறு நீக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சேவையாற்றிய பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.