இயக்குநராகும் சிவகார்த்திகேயன்
'ரஜினி முருகன்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை அவரே தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஜூலை 17ஆம் திகதி இப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது 'ரஜினி முருகன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தனது அடுத்த படத்துக்காக பலரிடம் கதைகளை கேட்டு வந்தார் சிவகார்த்திகேயன். அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அப்படத்தை தயாரிக்க இருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அத்தோடு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.